ABOUT TEMPLE
உலகம் உய்யும் பொருட்டு இறைவன் எல்லா இடங்களிலும் ஆலயம் கொண்டு அருள்புரிந்து வருகின்றார். இங்குள்ள ஸ்ரீமணிகண்டேஸ்வர ஸ்வாமி ஆலயம் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலில் மூலவர் சுவாமி ஸ்ரீமணிகண்டேஸ்வரர் மேற்கு முகமாகவும் அம்பாள் ஸ்ரீசிந்தாமணி அம்பிகை தெற்கு முகமாகவும் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்கள். இவ்வாலயத்தின் கிழக்கே சூர்ய புஷ்கரணி என்ற திருக்குளம் உள்ளது. பொதுவாக மேற்கு வாயிலில் இருந்து மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் மூலவருக்குக் கிழக்கே திருக்குளம் இருப்பது மிகவும் சிறப்பானது என்பது ஆன்றோர் கருத்து. இந்த ஆலயத்தில் பிரதோஷம், கார்த்திகை தினங்களில் விசேஷ பரிகார பூஜையும், பிரதி வெள்ளிக்கிழமை ஸ்ரீசிந்தாமணி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், பிரதி அஷ்டமி தோறும் ஸ்ரீகுருபைரவருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்று வருகின்றன.
திருவிடைமருதூர் சரக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அவர்களின் கீழ் வரும் இத்திருக்கோயிலுக்கு ஒரு கால பூஜைக்காக வழங்கப்பட்டு வரும் நிதியிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக்கொண்டு பூஜை நடைபெற்று வருகிறது.
|